புதுதில்லி:
மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக இருப்பவர் குமன் சிங் தாமோர். இவர், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், இந்தியாவின் முதல்பிரதமரான ஜவகர்லால் நேருவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, பாகிஸ்தான் தலைவர் ஜின்னாவை புகழ்ந்து பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்தபோது தான்தான் பிரதமர் ஆக வேண்டும் என்பதில் நேரு பிடிவாதமாக இருந்தார்” என்றும், “நேருவுக்குப் பதில் முகமது அலி ஜின்னா பிரதமராக பதவியேற்றிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது” என்று குமன் சிங் தாமோர் தனது குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஜின்னா நன்கு படித்தவர். வழக்கறிஞராக பணியாற்றியவர்” என்றும் புகழ்ந்துள்ளார்.
இரண்டு நாடுகள் என்ற கோஷத்தை ஆர்எஸ்எஸ் எழுப்பியதற்குப் பின்னரே, முகம்மது அலி ஜின்னாவும், தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார். சொல்லப்போனால், அந்த முழக்கத்தை நோக்கி ஜின்னாவை தள்ளிவிட்டதே ஆர்எஸ்எஸ் அமைப்புதான். அப்படியிருக்க, பாஜக வேட்பாளர், ஜின்னாவை புகழ்ந்து பேசியிருப்பது, பாஜக-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.