tamilnadu

img

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் ‘370’ சிறப்புரிமை வேண்டும்... மோடி அரசுக்கு பண்டிட்டுகள் கோரிக்கை

புதுதில்லி:
காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சதீஷ் மகால்தார் தலைமையிலான “நல்லிணக்கம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு” என்ற புலம்பெயர் காஷ்மீர் பண்டிட்டுகளின் அமைப்பு, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை உடனடியாக வழங்க வேண்டும். தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள், பிராந்தியங்கள் மற்றும் அனைத்து சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது சமத்துவ உரிமையை உறுதிசெய்துள்ளது.

மதம், சாதி, பிராந்தியம் மற்றும் இதரஅம்சங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுதல் கூடாது என்று இந்த சமத்துவ உரிமை வலியுறுத்துகிறது. அதேநேரம் பின்தங்கிய பிராந்தியங்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் பாதுகாப்பதற்கு 370, 35ஏ போன்ற பிரிவுகளும் கொண்டுவரப்பட்டன.எனவே, அரசியல் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வை காண முடியாது மற்றும் தன் சொந்த மக்களுக்கு எதிராகவேயுத்தம் நடத்த முடியாது” என்று கூறியுள்ளது.இதனிடையே சதீஷ் மகால்தார் தலைமையிலான காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது என்று ஏனைய காஷ்மீர் பண்டிட்அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.