இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்களைவகுப்புக்கு வெளியே வெய்யிலில் அமர வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளபெங்காலி பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடந்துள்ளது. இதில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ- மாணவியர் வகுப்பறையின் உள்ளே அமர்ந்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளை வகுப்பறையின் வெளியே வெய்யிலில் தரையில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.இது குறித்து இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரையுடம் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் இடம் ஒதுக்கி விட்டு, மற்ற பள்ளிகளைச் சேர்ந்தவர்களை வெளியே அமர வைத்ததாக பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கம் அளித்துள்ளது.அதேநேரம், இஸ்லாமிய மாணவர்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிகப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பள்ளி நிர்வாகம் பூனைக்குட்டியை வெளியே விட்டுள்ளது.