புதுதில்லி:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.7 சதவிகிதம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistics Office - NSO) தெரிவித்துள்ளது.முந்தைய காலாண்டைவிட ஜிடிபி 0.2 சதவிகிதம் உயர்ந்திருந்தாலும், இது கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத மிக மெதுவான வளர்ச்சியாகும்.
இரண்டாவது காலாண் டில் (ஜூலை - செப்டம்பர் இடையே) மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி வெறும் 4.5 சதவிகிதமாக இருந்தது. முந்தைய ஆறரை ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சிக் குறைவாக இது பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது காலாண்டில் 0.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2019-20 நிதியாண்டிற் கான ஜிடிபி விகிதங்களை மத்திய அரசு மாற்றியமைத்து முதல் காலாண்டில் ஜிடிபி மதிப்பு 5 சதவிகிதம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதனை 5.6 சதவிகிதமாகவும், இரண்டாவது காலாண்டு ஜிடிபி மதிப்பை 4.5 சதவிகிதத்தில் இருந்து 5.1 சதவிகிதமாகவும் தாமாகவே உயர்த்திக் கொண்டது. இந்த வகையில் பார்த் தால், 2019-20 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 4.7 சதவிகிதம் என்று குறைந்திருக்கிறது.2018-19 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 5.6 சதவிகிதமாக இருந்தது. அதனோடு ஒப்பிடும்போது, தற்போதைய ஜிடிபி வளர்ச்சி 0.9 சதவிகிதம் குறைவாகும்.