புதுதில்லி:
2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி4.5 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், வரும் காலங்களில் இது மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.ஆனால், இந்த புள்ளிவிவரத்தை, பாஜக மூத்தத் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி மறுத்துள்ளார்.“ஜிடிபி வளர்ச்சி 4.8 சதவிகிதமாக குறைந்து விட்டது என்று அவர்கள் (மத்திய அரசு) கூறுகிறார்கள். ஆனால், உண்மையான ஜிடிபி வளர்ச்சி 1.5 சதவிகிதமாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
\மேலும், “மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று விமர்சித்துள்ள சுப்பிரமணியசாமி, “பிரதமரைச் சுற்றியுள்ள ஆலோசகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பிரதமரிடம்பொருளாதாரத்தின் உண்மைத் தன்மையைக் கூறாமல், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பொய்யான தகவலைக் கூறி நம்பவைக்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னதாக கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையை விமர்சித்த சுப்பிரமணியசாமி, “பொருளாதாரத்தின் அடிப்படை கூட, மோடி அரசுக்குதெரியவில்லை என்பதற்கு இதுவே உதாரணம்” என்றும் கடுமையாக கூறியிருந்தார்.