புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிவெறும் 5 சதவிகிதமாக மட்டுமேஇருக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக, 2019 - 20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், (ஜூலை - செப்டம்பர்) ஜிடிபி 4.2 சதவிகிதத்தை தாண்ட வாய்ப்பில்லை என்றும் அதிர்ச்சி அளித்துள்ளது.இந்தியப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்த புதியமதிப்பீட்டை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) பொருளாதாரப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில், இதற்கு முன்னர் 2019-20 நிதியாண்டில் 6.1 சதவிகிதமாக ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்திருந்த எஸ்பிஐ, தற்போது 5 சதவிகிதமாக ஜிடிபி கணிப்பை குறைத்துள்ளது.மேலும், ஆட்டோமொபைல் விற்பனை சரிவு, உற்பத்தித் துறையில் வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 4.2 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலகவங்கி, ஓ.இ.சி.டி, சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) என பல சர்வதேச நிறுவனங்களும் வங்கிகளும் இந்தியா வின் ஜிடிபி கணிப்பை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.