tamilnadu

img

மருத்துவமனைகள் கைவிரிப்பு ஆட்டோவில் பிரசவம்....

பெங்களூரு:
 பெங்களூரு கோரேபாளையத்தில் வசித்து வரும் 27 வயது கர்ப்பிணிக்கு சனியன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தயாரும் சகோதரனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கோவிட் முன்னெச்சரிக்கை எனக்கூறி 5 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. ஆறாவது மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த பெங்களூரு மலையாளிகள் அமைப்பினர் கேரளத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தனர். அதன்படி பெங்களூரு கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.