லக்னோ, செப்.28- உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 76.4 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. தொடர்மழையால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல பகுதி களில் மரங்கள் வேரோடு சரிந் தன. இதனால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மாநிலத்தின் முக்கிய நகரங்களான வார ணாசி, ரேபரேலி, அமேதி, லக்னோ, உன்னாவ் ஆகிய நகரங்கள் உள்பட பல இடங் களில் மழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி சனி யன்று அதிகாலை வரை மாநி லத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 47 பேர் உயிரிழந்த தாக மாநில அரசு தெரிவித்தி ருந்தது. உத்தரப்பிரதேச முத லமைச்சர் யோகி ஆதித்ய நாத் சம்பந்தப்பட்ட அதிகாரி களை பாதிக்கப்பட்ட பகுதி களுக்குச் சென்று மீட்பு பணி களில் ஈடுபடுமாறு உத்தர விட்டுள்ளார்.