புதுதில்லி:
இந்தியர்கள் மருந்து, மாத்திரைகளுக்காக கடந்த ஓராண்டில் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து இருப்பதாக அகில இந்திய வேதியியல் மற்றும் மருந்துப் பொருள் நிறுவனம் (All India Organisation of Chemists & Druggists -AIOCD) தெரிவித்துள்ளது.குறிப்பாக, இதயப் பிரச்சனைகள், சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட சில நோய்களுக்காக இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு செலவு செய்திருப்பதாகவும் ஏஐஓசிடி அமைப்பு கூறியுள்ளது.செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் ஓராண்டில் மருந்து மாத்திரைகளுக்காக ஒருலட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியர்கள் செலவிட்டுள்ளனர். இதில், நீரிழிவு நோய் மற்றும் இதயக்கோளாறுக்கான மருந்து மாத்திரைகளுக்காக 31 சதவிகிதம் செலவிடப்பட்டு உள்ளது.அதாவது, 12 மாதங்களில் இதயக் கோளாறு தொடர்பான மருந்து மாத்திரைகளுக்காக 17 ஆயிரம் கோடி ரூபாய், இரைப்பைபிரச்சனைகள் தொடர்பான மருந்து மாத்திரைகளுக்காக 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய்.ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளுக்காக 13 ஆயிரத்து 360 கோடி ரூபாய் என செலவிட்டுள்ளனர்.