tamilnadu

தங்க பிஸ்கட் கடத்தல்: விமான நிறுவன அதிகாரி கைது

ஹைதராபாத்:
வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஹைதராபாத் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டார். வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 2 பாக்கெட்டுகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது 4,891 கிராம் எடையிலான 42 தங்க பிஸ்கட்டுகள் இருந்தது சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டது.சுமார் 1 கோடியே 84 லட்சம் ரூபாய்மதிப்பிலான தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம்விசாரித்தனர். துபாயிலிருந்து விமானத்தில் வந்த பயணிகள் இருவர் அந்த தங்க பிஸ்கட்களை வழங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.