புதுச்சேரி
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் நடைப் போட்டு வருவதால் வரும் சனியன்று (ஆக., 22) கொண்டாப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வீடுகளில் மட்டுமே விநாயகர் சிலை (சிறியதாக) வைத்து வழிபட வேண்டும். தெருக்களில், நகரின் முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலை வைத்தோ, அதனை ஊர்வலமாக கொண்டு செல்லவோ கூடாது என தமிழக அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து தான் அனைவரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். பொது இடங்களில் மக்கள் விநாயகருடன் கூடி கொரோனாவை பரப்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.