“உலகம் இந்தியாவை மேலும் மேலும் கவனித்துக் கொண்டிருக்கிறது.” - பிரதமர் மோடி.ஆம்! கோவிட் தொற்றை எதிர்கொள்வதில் இந்தியாவின் தோல்வியை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் வேறு வழி இல்லை.
*****************
பசி/பட்டினிக் கொடுமை இந்தியாவை பயமுறுத்திக் கொண்டுள்ளது. மால்கள் எனும் பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு எதிராக இப்படி செயல்படும் ஒரு அரசாங்கத்தை இந்தியா கண்டதே இல்லை. “சப்கா விகாஸ்” அனைவரின் முன்னேற்றம் எனும் வெற்று முழக்கத்தின் நிதர்சமான உண்மை.
*****************
ஊரடங்கின் பொழுது உயர் சாதியினரைவிட பிற்படுத்தப்பட்ட மக்கள் இரு மடங்கும் தலித் மக்கள் மூன்று மடங்கும் வேலை இழந்தனர் என செய்திகள் வெளியாகி யுள்ளன. சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை கோவிட் வைரஸ் மிக அதிகமாக பாதித்துள்ளது. அவர்களைப் பற்றிய கவலை இந்த அரசுக்கு இல்லை. இட ஒதுக்கீட்டையும் கடந்த காலத்தில் நிரப்பப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் பணியிடங்களை பூர்த்தி செய்வதையும் மோடி அரசாங்கம் சிதைப்பதை அனுமதிக்க முடியாது.
*****************
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்துக் கொண்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி குறித்து கவலைப்படாத ஒரே நபர் பிரதமர் மோடி தான்.
*****************
பெரும் பொது முதலீடுகள் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள்; அதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு; மக்களின் வாங்கும் சக்தி உயர்த்துதல் - இவற்றைச் செய்வதன்மூலம் மட்டும் தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். நம் தேசத்தில் இயற்கை வளங்கள் பற்றாக்குறை இல்லை. கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு பெரும் லாபம் கொள்ளை அடிக்க இயற்கை வளங்களை தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்.
*****************
அவசரச் சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அன்னமிடும் விவசாயிகளின் கோபம்... விவசாயத் துறையில் வளர்ச்சி உருவாகி வருகிறது என்னும் பா.ஜ.க.வின் பொய் அம்பலமாகிறது. விவசாயத்தை அந்நிய விவசாய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அவசரச் சட்டங்கள் ஏற்கனவே துன்பத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வை சூறையாடி விடும்.
சமூக வலைத்தளங்களில் பார்க்க : https://www.facebook.com/ComradeSRY/ https://twitter.com/SitaramYechury