tamilnadu

img

40 சதவீதக் குழந்தைகளுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்படவில்லை... தேசிய புள்ளிவிவர அமைப்பு அறிக்கை

புதுதில்லி:
நாட்டில் 40 சதவீதக் குழந்தைகளுக்கு, முழுமையாகத் போடப்பட வேண்டிய நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படவில்லை என்று தேசிய புள்ளிவிவர அமைப்புஅறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள குழந்தைகள் அநேகமாக காசநோய், போலியோ தடுப்பூசி முதலானவை போடப்பட்டிருந்தபோதிலும்,  அவை நோய்த்தடுப்புக்குத் தேவையான காலத்திற்கு, முழுமையாக அவற்றைப் போட்டுக்கொண்டதாகச் சொல்லமுடியாது என்றும், இக்குழந்தைகளில் ஐந்தில் இரண்டுகுழந்தைகளுக்கு முழுக் கால அளவிற்குஇவ்வாறு தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்றும் தேசியப் புள்ளிவிவர அமைப்பு, ‘இந்தியாவில் சுகாதாரம்’ என்னும்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இக்குழந்தைகளில் பெரும்பாலானவை தட்டம்மைக்கு எதிராகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமலேயே இருக்கின்றன என்றும், மற்ற நோய்களுக்கு எதிராகவும்சிறிய அளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு எட்டு விதமான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இந்தஎட்டுவிதமான தடுப்பூசிகளும் நாட்டின் தலைநகரில் உள்ள குழந்தைகளில் பாதி அளவினருக்கும் குறைவான குழந்தைகளுக்குத்தான் போடப்பட்டிருக்கின்றன.இந்த அறிக்கை, 2017 ஜூலை – 2018ஜூன் வரையிலான காலத்திற்கான தேசியமாதிரி சர்வேயின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மாதிரி சர்வே அறிக்கையானது ஒவ்வொரு குடும்பத்தினரும் மேற்கொள்ளும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை ஆய்வு செய்து அளிக்கப்படுவதாகும்.

தேசியப் புள்ளிவிவர ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி நாட்டில் 59.2 சதவீதக் குழந்தைகளுக்குத்தான்  அனைத்துத் தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்டிருக்கின்றன. இது, அரசாங்கம் வெளியிட்டுள்ள மத்திய சுகாதார மேலாண்மை தகவல் முறையின் தரவுக்கு முரண்படுகிறது. அந்தத் தரவில்நாட்டில் 86.7 சதவீதக் குழந்தைகளுக்குமுழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.  

எட்டு தடவைகள்
குழந்தைகளுக்கு முழுமையாக நோய்த்தடுப்புக்கு அதன் முதல் ஆண்டில் பல்வேறுவகையான நோய்த்தடுப்பு மருந்துகள் அடங்கிய தடுப்பூசிகள் எட்டு தடவை போட்டுக் கொள்ள வேண்டும். நாட்டில் 97 சதவீதக் குழந்தைகளுக்கு பி.சி.ஜி. அல்லதுபிறப்பின்போது ஓரல் போலியோ தடுப்புமருந்து முதல் தடவை (first dose of OralPolio Vaccine) அளிக்கப்படுகிறது. எனினும்,தட்டம்மைக்கு எதிராக 67 சதவீதக் குழந்தைகள்தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. 58 சதவீதக் குழந்தைகள் போலியோ பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்கின்றன. 54 சதவீதக்குழந்தைகள் டிபிடி பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்கின்றன.             (ந.நி.)