tamilnadu

img

வெளிநாட்டினரின் விசாக்காலம்  ஏப்.15 வரை நீட்டிப்பு

புதுதில்லி:
கொரோனா வைரஸ் நோய் அச்சத்தால் இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்காலத்தை கருணை அடிப்படையில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் சுற்றுலா மற்றும் இதர பணிகள் காரணமாக பல வெளிநாடுகளில் இருந்து பலர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கொரோனா நோய் அச்சத்தால் விமானச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களது நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. இவர்களில் சிலரது விசாக்காலம் முடிவடைந்து விட்டதால் இந்திய குடியுரிமைத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்காலத்தை கருணை அடிப்படையில் ஏப்ரல்15 ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம்வெள்ளியன்று முடிவு செய்துள்ளது. சிறப்பு சலுகையின்கீழ்’ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்து, ஏப்ரல் 14 ஆம் தேதிநள்ளிரவு வரை தங்களது விசாக்காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.