tamilnadu

img

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்கும் உத்தேசம் இல்லை

 

புதுதில்லி, ஜூலை 27-

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்கும் முன்மொழிவுகள் எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்விநேரத்தின்போது பி.ஆர். நடராஜன், நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகள் நாட்டின் மொத்தம் எத்தனை உள்ளன, குறிப்பாக அதில் கோவையில் எத்தனை உள்ளன, இவற்றில் உற்பத்திப் பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா, ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்று கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கான அமைச்சர் நிதின் கட்காரி, நாட்டில் மொத்தம் 71.39 லட்சம் தொழில் பிரிவுகள் நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றும் இதில் கோவையில் 90,367 பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றும் இத்தொழில் பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிப்பதற்கான கருத்துரு ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.