புதுதில்லி:
இந்தியாவில், “நெருப்பு வளையசூரிய கிரகணம்” வியாழனன்று காலை 8 மணிக்கு தொடங்கி 11:16 மணியளவில் நிறைவடைந்தது. பிரதமர் மோடியும் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க ஆசைப்பட்டு கண்களில் கண்ணாடியுடன் காத்திருந்தார். ஆனால், அவரால் கிரகணத்தை காண முடியவில்லை.“நாட்டு மக்களைப் போல் நானும்சூரிய கிரகணத்தைக் காண ஆவலோடு இருந்தேன். துரதிருஷ்டவசமாக மேகமூட்டத்தால் என்னால்கிரகணத்தை காண முடியவில்லை. இருப்பினும், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்த கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். இதுபற்றி நிபுணர்களுடன் தொடர்பு கொண்டது எனது அறிவை வளப் படுத்தியது” என்று மோடியே அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில், சூரிய கிரகணத்தைக் கண்டு ரசிப்பதற்கு, பிரதமர் மோடி அணிந்திருந்த கண்ணாடியின் விலை ரூ.1.5 லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘மேபேக்’ ரகத்தைச் சேர்ந்த இந்தகண்ணாடியின் விலை ஆன்லைனில்2,159 டாலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின்படி அந்த கண்ணாடியின் விலை ரூ. 1 லட்சத்து 53ஆயிரத்து 886 ரூபாய் 61 காசுகளாம்.