புதுதில்லி:
விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக மாற்ற மோடி அரசு நினைக்கிறது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தகமசோதா, விவசாயிகளின் விளைபொருட் களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப்பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது டிவிட்டரில், மோடி அரசாங்கத்தால்விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த திட்டம் வெற்றிபெற நாடு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.