புதுதில்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் செப்டம்பர் 18 அன்று ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
சம்பள குறைப்பு மசோதா பற்றி திமுக எம்.பி. வில்சன் பேசுகையில், இந்த மசோதாவால் குறைக்கப்படும் தொகை சுமார் ரூ.4 கோடி. ஆனால், மசோதாவைவிவாதிப்பதால் ஆகும் செலவு ரூ.6 கோடி. நாடாளுமன்ற அவையை ஆளும் கட்சி எப்படி வீணடிக்கிறது என்பதற்கு சம்பள குறைப்பு மசோதா உதாரணம். நாங்கள் மசோதாவை எதிர்க்கவில்லை. நாங்களாகவே நிதி தர தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.