tamilnadu

img

2020-இலும் வேலைவாய்ப்பு உருவாக சாத்தியமில்லை... பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் சொல்கிறார்

புதுதில்லி:
2019 முடிந்து 2020-ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், வரப்போகிற புதிய ஆண்டில் வேலைவாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று பல்வேறு தரவுகள் வெளியாகியுள்ளன.தற்போதைய நிலையில், நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களின் திறனை உயர்த்தும் முயற்சியிலேயே இறங்குவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், வேலையில் இருப்பவர்களுக்கும் 2020-ல்ஊதிய உயர்வு பெரிதளவில் மேற்கொள்ளப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘2020-இல் முதலீடுகளும், நுகர்வும் அதிகரிக்கும்பட்சத்தில் வேலைவாய்ப்பு சற்று உயரவாய்ப்பு உள்ளது. பதிலாக, தற்போது நிலவும் மந்தநிலை தொடர்ந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை’ என்று இந்திய பணி
யாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.அதிலும் குறிப்பாக 2020-ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு என்று நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிசைன் திங்கிங், இண்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி),ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டோமேசன் (ஆபிஏ)உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிபெற்று இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.