புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில் இந்திய ஜிடிபி 5 சதவிகித வளர்ச்சியைத்தான் எட்ட முடியும் என்றுஇரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு நிறுவனமான, புள்ளியியல் அலுவலகம் கூறியிருந்தது. கடந்த 11 ஆண்டுகளிலேயே இதுதான் மோசமான வளர்ச்சி விகிதம் என்றும்பதிவு செய்திருந்தது.இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டிருக்கும் தனது உலகளாவிய பொருளாதார அறிக்கையிலும், 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகவே இருக்கும்; இது வங்கதேச நாட்டின் வளர்ச்சியை விடவும் குறைவாகும் என்று தெரிவித்துள்ளது.
2008-09 நிதியாண்டின்போது, 3.1 சதவிகிதபொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவில் இருக்கும் என உலக வங்கி கணித்தது. அதன்பிறகு, இப்போதுதான், 2-ஆவது முறையாக,மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை, உலக வங்கி கணித்துள்ளது.உலக வங்கியின், இந்த அறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத மதிப்பீட்டிற்கு ஏற்ப உள்ளது. ஏனெனில் ரிசர்வ் வங்கி, இந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கும் என தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி, ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த நிதியாண்டில் வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக குறையும் என்றுகணிக்கப்பட்டிருந்தது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட வங்கதேசம் முன்னிலையில் இருக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை என்று அறிக்கை தெரிவிக்கிறது.அதேபோல, 2020 காலண்டர் ஆண்டில்,தெற்காசிய பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், தெற்காசிய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்.பாகிஸ்தான் மற்றும் இலங்கையை காட்டிலும் கீழே சென்றுவிடக் கூடாது என்பதுதான்தற்போதைய நிலையில், இந்தியாவின் கவலையாக மாறியுள்ளது. பாகிஸ்தான் 3 சதவிகிதம், இலங்கை 3.3 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன.