tamilnadu

img

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி....  கர்நாடகாவில் பள்ளித்தேர்வுகள் ஒத்திவைப்பு

பெங்களூரு 
புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. வெளிநாடுகளிருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் படிப்படியாகப் பரவி வருகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேரும், கேரளாவில் 22 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனால் கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் முடங்கியுள்ளன.  வணிக வளாகங்கள், திரையரங்குகள், இரவு நேர மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளின் ஆண்டுத் தேர்வுகளை மார்ச் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.