கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், நாளை(டிச.14) சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.