புதுதில்லி:
கர்நாடக மாநில ‘அதிருப்தி’ எம்எல்ஏக்கள் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை தெளிவாக விளக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைகுண்டுராவ் தாக்கல் செய்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் 13 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் 3 எம்எல்ஏக்களும் தங்களின் பதவியைராஜினாமா செய்வதாக, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். ஆனால், கடிதங்கள் முறைப்படி வழங்கப்படவில்லை என்று கூறி, கர்நாடக மாநில சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார், ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ‘அதிருப்தி’ எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.உச்ச நீதிமன்றமோ, “அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கக் கூடாது; அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜினாமாகடிதங்கள் மீது முடிவை அறிவித்த பிறகே, சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்று அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித் தது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறிவிட்ட சபாநாயகர் ரமேஷ் குமார், முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அனுமதி வழங்கி, அதன் மீதான விவாதத்தை நடத்தி ருகிறார்.இந்நிலையில்தான், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், ‘அதிருப்தி’ எம்எல்ஏ-க்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது என்று குண்டுராவ் முறையிட்டுள்ளார்.அத்துடன், “அதிருப்தி எம்எல்ஏ-க்களின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது, அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணாக உள்ளது; அரசியல்கட்சிகளுக்கு, இந்திய அரசியல மைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பறிப்பது போல உள்ளது” என்று குண்டுராவ் குறிப்பிட்டுள்ளார்.