புதுதில்லி, மார்ச் 1- தில்லி வன்முறை வெறியாட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று இருவேறு இடங்களில் இருந்து மேலும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இத்துடன் வன்முறைச் சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 45 பேராக அதி கரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனா். இதற்கிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டு தில்லி ஜிடிபி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஞாயி றன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.