tamilnadu

img

ஒரு கோஹினூர் வைரத்தை தில்லி நீதிமன்றம் இழந்துவிட்டது

பிரிவு உபசார விழாவில் நீதிபதி முரளிதருக்கு பாராட்டு

புதுதில்லி, மார்ச் 6 - தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யான முரளிதர், பஞ்சாப் - ஹரி யானா நீதிமன்றத்திற்குக் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இட மாற்றம் செய்யப்பட்டார். தில்லி வன்முறை தொடர் பான வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், வெறுப்பைத் தூண் டிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில், அன்றிரவே அவரை பணியிட மாறுதல் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.  பிப்ரவரி 17-ஆம் தேதியே முரளிதரின் பணியிட மாறு தலுக்கு கொஜீலியத்தின் அனு மதியை பெற்றுவிட்டதாக கூறப் பட்டாலும், பாஜகவினருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நாளில்,  அவசர அவசரமாக அன்றிரவு 11 மணிக்கு, இடமாறுதல் உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது சந்தே கத்தை எழுப்பியது. முன்னாள்  நீதிபதிகள் உட்பட பலர் இதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

இதனிடையே, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு, தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழனன்று பிரிவு உபசார விழா நடை பெற்றது. இதில், நீதிபதி முரளி தரின் பணியை பலரும் வெகு வாக பாராட்டினர்.  “எந்த தலைப்பையும் பேசக் கூடிய, எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கக் கூடிய சிறந்த நீதிபதியை நாம் இழக்கிறோம்” என்று தலைமை நீதிபதி டி.என். பாட்டீல், குறிப்பிட்டுள்ளார். தில்லி வழக்கறிஞர்கள் சங்கத் தின் தலைவர் அபிஜத், “தில்லி உயர் நீதிமன்றத்தின் கோஹி னூர் வைரத்தை இழக்கிறோம். இந்த வைரம் நம்மை விட்டு 100 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் செல்கிறது” என்று புகழ்ந்துள்ளார்.  ஏற்புரையாற்றிய நீதிபதி முரளிதர், “நீதி என்றைக்கு வெற்றி பெற வேண்டுமோ அன் றைக்கு வாய்மையால் வெற்றி  பெற்று விடும். நிச்சயம் நீதி கிடைக்கும்” என்று குறிப்பிட்டார். முன்னதாக இந்த பிரிவு  உபசார விழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், அதனை சுட்டிக்காட்டி “தில்லி உயர்நீதி மன்றம் இதுபோன்ற பிரியா விடையை எப்போதும் கண்ட தில்லை. ஒரு நீதிபதி தனது தீர்ப்பு சத்தியத்திற்கு நெருக்க மானது என்று காட்டி அரசியலை மைப்பையும், உரிமைகளை யும் நிலைநாட்டியுள்ளார்” என்று மூத்த வழக்கறிஞர் பிர சாந்த் பூஷன் நெகிழ்ந்துள்ளார்.