tamilnadu

img

திருப்பதி லட்டுகளை நிறுத்த முடிவு?

திருப்பதி,ஜன.1- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டு களை விரைவில் ரத்துசெய்யும் வகையில்,  முதல்கட்டமாக அனைத்து  பக்தர்களுக்கும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ் தானம் முடிவுசெய்துள்ளது.  தற்போது இலவச தரி சனத்திலும்,  மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் மட்டும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப் படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 250கோடி ரூபாய்  இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்  பட்டுள்ளது. இதனால்  சலுகை விலை லட்டுகளை ரத்துசெய்ய முடிவு செய்துள்ளதாக தேவஸ் தான நிர்வாகம் கூறியுள்ளது.