சென்னை,நவ.17- திருப்பதியில் மானிய விலையில் வழங்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்த ப்படமாட்டாது என்று தேவ ஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், லட்டு விலை உயர்த்தப்பட இருப்பதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி. விலையை உயர்த்த கருத்துருக்கள் பெறப்பட்டது. ஆனால் அவற்றை தேவஸ்தான நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை என்றார்.