எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு பணிந்தது அரசு
புதுதில்லி, மார்ச் 3- எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, தில்லி வன்முறை தொடர்பாக மார்ச் 11 அன்று நாடாளுமன்றத்தில் விவா தம் நடைபெறும் என்று சபாநாய கர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும் பப் பெறக் கோரி தில்லியில் போரா டியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆத ரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மத வெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை நாற்பதுக்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ளனர். ஏரா ளமானோர் படுகாயமடைந்துள்ள னர். தில்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. உள் துறை அமைச்சராக அமித் ஷா உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடா ளுமன்றம் கூடியுள்ளது. தில்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக் கங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் நாள் முழுவதும் ஒத்திவைக் கப்பட்டது.
இந்தநிலையில் செவ்வா யன்று நாடாளுமன்றத்தின் மாநி லங்களவை 11 மணிக்கு கூடியதும் தில்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து மாநிலங்க ளவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற மேலவை புத னன்று காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகை யில், அனைவரும் சபாநாயகர் முடி வுக்கு கட்டுப்பட வேண்டும். தில்லி கலவரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் மார்ச் 11 ஆம் தேதி விவா தம் நடைபெறும் என்று தெரிவித் துள்ளார்.