புதுதில்லி:
விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக, மத்திய அரசேதிட்டமிட்டு வன்முறை அரங்கேற்றிஇருப்பதாகவும், இதற்கு பொறுப் பேற்று, மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மேலும் கூறியிருப்பதாவது:“
புதிய வேளாண் கொள்கைகள் மூலம் விவசாயிகளை வேதனை அடையச் செய்ததுதான் மோடி அரசின் சாதனை. முதலில் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை தாக்கினர். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மூலம் விவசாயிகளை சோர்வடைய வைத்தனர். மேலும், அவர்களை பிரித்தாள முயற்சித்து, இறுதியாக சில குற்றவாளிகள் மூலம் டிராக்டர் அணிவகுப்பில் வன்முறையை உருவாக்கி அந்தப் பழியை விவசாயிகள் மீதே போட்டு அவதூறு செய்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது. தற்போதும், மோடி அரசாங்கத்தின் உதவியோடுதான், ஒரு ஒருங்கிணைந்த சதித்திட்டம் மூலம் விவசாயிகளின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. விவசாயிகளைப் போராட்டக்களத்திலிருந்து வெளியே தள்ளுவதற்காக, வன்முறையாளர்களை விடுத்து விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீதே மத்திய அரசு எப்.ஐ.ஆர்.போட்டு வருகிறது. இந்த எப்.ஐ.ஆர். மிரட்டல் நடவடிக்கைகளுக்கு இடையே,மூன்று விவசாயிகள் விரோத கறுப்புச்சட்டங்களுக்கு எதிரான கோரிக்கையை பின்னுக்குத் தள்ளும் வேலையிலும் இறங்கியுள்ளது.இது மோடி அரசின் சதியையும்சூழ்ச்சியையுமே அம்பலப்படுத்துகிறது.முதன் முதலாக ஒரு அரசு, செங்கோட்டையைக் காக்கத் தவறி விட்டது. 500 விஷமிகள் செங் கோட்டை உள்ளே புகுந்தபோது, போலீசார் நாற்காலிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.இது மிகப்பெரிய அளவில் நடந்துள்ள பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் தோல்வியாகும். விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததற்கு நேரடியாக அமித் ஷா-தான் பொறுப்பு. உளவுத்துறை எச்சரித்தும் விவசாயிகள் பேரணியில் வன்முறையாளர்கள் புகுந்திருக்கின்றனர் என்றால் அதற்கு அமித்ஷா-தான் காரணம். எனவே அவர் உள்துறை அமைச்சராக இருக்க உரிமையற்றவர்.அவர் தன் பதவியை உடனே ராஜினாமா செய்வது அவசியம். பிரதமர் நரேந்திர மோடி அமித் ஷாவை நீக்க வேண்டும். இல்லையெனில் பிரதமரும் சதியின் ஒரு அங்கம் என்றேகருத வேண்டியது வரும்.இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
வன்முறையை தூண்டியவர்களிடம் அரசு அடையாள அட்டை
தில்லி வன்முறை, மோடி அரசின் திட்டமிட்ட சதி என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்கும்குற்றம் சாட்டியுள்ளார். தில்லி டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தொடங்கிய 15 பேரை, விவசாயிகளே பிடித்து,காவல்துறையினரிடம் ஒப்படைத் துள்ள நிலையில், அவர்களிடம் அரசு அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் அமைதியான இயக்கத்தைக் கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த சதித்திட்டம்தான் தில்லி வன்முறை என்பது இதன்மூலம் அம்பலமாகி இருப்பதாகவும் குறிப்பிட் டுள்ளார்.