புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது கடந்த 2020 பிப்ரவரியில் பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.இதில் 53 பேர் வரை கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் அஜய் கோஸ்வாமியும் ஒருவர் ஆவார். சிறையில் அடைக்கப்பட்ட இவர், நீண்டநாள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அவர் வடகிழக்கு தில்லியில் ஒருவரை மீண்டும் அடித்துத் துன்புறுத்தி‘பாகிஸ்தான் ஒழிக’ (Pakistan murdabad)என்று கூற வைத்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. பழைய கார்ஹி மெண்டு கிராமத்தைச் சேர்ந்த இவர் மீது, காஜூரி காஸ்காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஆனால், தனது பண்ணையில் திருட வந்தவரையே கோஸ்வாமி அடித்ததாக போலீசாரின் கூற்றை மேற்கோள் காட்டி ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.உண்மையில், ‘இந்துஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் ஒழிக என கோஷம்போடு’ என்றுகூறியே கோஸ்வாமி அந்த நபரைத் தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது.