tamilnadu

img

பெல்ட்டால் தாக்கி மொட்டையடித்து தலித் இளைஞர் சித்ரவதை.. போலீஸ் காவலில் நடந்த அராஜகம்

விஜயவாடா:
ஆந்திர மாநிலத்தில், லாக்-அப்பில் வைத்து, தலித் இளைஞர் ஒருவரை மொட்டை அடித்து சித்ரவதை செய்தசம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் வெகுளபள்ளி கிராமத்தில் சிலமணல் லாரிகள் வரிசையாக வந்துள் ளன. அப்போது சவ ஊர்வலம் ஒன்றுஅந்த வழியாகப்  புறப்படத் தயாராகஇருக்கவே, “சவ ஊர்வலம் செல்லும்வரை லாரிகளை நிறுத்தி வையுங்கள்’’என்று தலித் இளைஞர் வரபிரசாத் என்பவர் கூறியுள்ளார். லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், தகவலறிந்து அங்குவந்த,அந்த ஊரின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர், லாரிகளை விடச்செய்துள்ளார்.அதைத்தொடர்ந்து, மறுநாள் அந்தகிராமத்துக்கு வந்த சீதாநகரம் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் பெரோஸ் என்பவரும், சில போலீஸ் காரர்களும் தலித் இளைஞர் பிரசாத்தையும், மேலும் இரண்டு இளைஞர்களையும் காவல்நிலையம் கொண்டு சென் றுள்ளனர்.அங்கு வரபிரசாத்தை “பெல்டால்’’ விளாசித்தள்ளிய சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் பெரோஸ், சவரத்தொழிலாளி ஒருவரை வரவழைத்து, தலித் இளைஞர் பிரசாத்தை மொட்டை அடிக்கச் செய்து, அவரது மீசையையும் சுத்தமாக மழித்துள்ளார்.காவல்நிலையத்திலேயே போலீசாரால் தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“ஒய்.எஸ்.ஆர். ஆட்சியில் காட்டுராஜ்ஜியம் மீண்டும் தலை தூக்கி விட்டது’’ என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.