tamilnadu

img

தலித் பத்திரிகையாளர் எரித்துக் கொலை?

புதுதில்லி:
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் சக்ரேஷ் ஜெயின். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், தீக்காயங்களால் மரணம் அடைந்துள்ள நிலையில், அவரை அரசு அதிகாரி உட்பட 2 பேர் சேர்ந்து எரித்துக் கொலை செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தி நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்துவந்தவர் சக்ரேஷ் ஜெயின். இவருக்கும் அரசு அதிகாரி அமன் சவுத்திரிக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள் ளது. அப்போது, எஸ்.சி. - எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுத்ரி மீது பத்திரிகையாளர் ஜெயின்வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.இந்நிலையில்தான் சக்ரேஷ்ஜெயின், அமன் சவுத்ரியின் வீட்டில் 90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப் பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார்.

தீக்காயம் ஏற்பட்ட 5 மணிநேரம் கழித்தே, சக்ரேஷ் ஜெயினின் சகோதரர் ராஜ்குமார் ஜெயினுக்கு தகவல் கிடைத்து, அவர் சக்ரேஷ் ஜெயினை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். எனினும் சக்ரேஷ் ஜெயின் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தனது சகோதரர் சக்ரேஷ் ஜெயினை, அரசு அதிகாரியான அமன் சவுத்ரி உட்பட 2 பேர் சேர்ந்து எரித்துக் கொன்று விட்டதாக ராஜ்குமார் ஜெயின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.அதனை மறுத்துள்ள அமன் சவுத்ரி,பத்திரிகையாளார் சக்ரேஷ் செயின்,தனது வீட்டிற்கு வந்து தீ வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார். அமன்சவுத்ரியும் 30 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.