பனாஜி:
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மேலும் 15 தினங்களுக்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கோவா முதல்வர், பிரமோத் சாவந்த் கொரோனா ஊரடங்கு குறித்து கலந்துரையாடினார். அப்போது ஊரடங்கு மேலும் 15 தினங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கோவா முதல்வர் அமித்ஷாவை கேட்டுக்கொண்டார்.
பின்னர், பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த், உணவகங்கள், ஹோட்டல்கள், மால்கள் மற்றும் ஜிம்களை மீண்டும் தொடங்க கோவா அரசு யோசித்துவருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியுள்ளேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், “நான் வியாழனன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் உரையாடினேன். தற்போதைய நிலையில் ஊரடங்கு இன்னும் 15 நாட்களுக்கு தொடரக்கூடும் என்று தோன்றுகிறது,” நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பதன் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.