புதுதில்லி:
‘தற்சார்பு பாரதம்’ (ஆத்மநிர்பார் பாரத் அபியான்) என்ற புதிய பெயரில் மோடி அறிவித்துள்ள ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் தொகுப்பால், இந்தியாவின்பெருமுதலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘மகிந்திரா’வின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அதானி குழுமத்தின் தலைவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கவுதம் அதானி- ஆகியோர் மட்டுமன்றி, சிஐஐ (CII),எப்ஐசிசிஐ (FICCI), ஜிஏஐடி (CAIT) உள்ளிட்டஇந்திய தொழில்- வர்த்தக நிறுவனங்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.“பிரதமர் மோடியின் உரையில் ‘பிழைத் திருத்திலில்’ இருந்து ‘வலுவடைதல்’ குறித் தான தொனி இருப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா புல்லரித்துள்ளார்.“1991-ஆம் அறிவிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் போல பிரதமரின் இந்தஅறிவிப்பு அமையும் என்று நம்புகிறேன்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதேபோல “ஆத்மநிர்பார் பாரத் திட்டம், அதன் பெருந்தொகைக்காக மட்டுமல்ல; மிகவும் விரிவான தொலைநோக்கிற் கும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக உள்ளது”என்று கூறியிருக்கிறார், அதானி குழுமத்தின் தலைவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கவுதம் அதானி.பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக இருப்பவை நிலம், ஊழியர்கள், லிக்வுடிட்டி மற்றும் விதிமுறைகள் உள் ளிட்ட துறைகள்தான். அதுதொடர்பான சட்டங்களை தளர்த்தும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று சிஐஐ இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்களால், நாட்டில் பொருளாதாரவளர்ச்சியின் அடுத்த அலை ஏற்படப் போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எப்ஐசிசிஐ தலைவர் சங்கீதா ரெட்டியும், தற்போதுள்ள நிலம், ஊழியர்கள் மற்றும்லிக்வுடிட்டி சார்ந்த அழுத்தங்கள் தளர்த்தப் படும்போது இந்தியா தற்சார்புடையதாக மாறும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.