தில்லி
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் கொடூரத்திற்கு இதுவரை 190-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக சேதாரத்தை சந்தித்தது அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டும் தான். காரணம் மற்ற நாடுகளில் கொரோனா எறும்பை போன்று ஊர்ந்து பரவி வருகிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் கொரோனா வண்டைப் போன்று பறந்து சென்று பரவுவுகிறது. இதனால் அந்த நாடுகள் உலகின் கொரோனா அட்டவணையில் டாப் - 3 இல் உள்ளன.
முதல் இடத்தில அமெரிக்காவும் (61.39 லட்சம்), 2-ஆம் இடத்தில் பிரேசிலும் (38.46 லட்சம்), மூன்றாம் இடத்தில் இந்தியாவும் (35.39 லட்சம்) உள்ளன. மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்திற்குள் உள்ளது.
இந்நிலையில் உலகின் கொரோனா அட்டணையில் அதிவிரைவில் சிறிய மாற்றம் நிகழப்போகிறது. அதுயாதெனில் ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியா விரைவில் 3-ஆம் இடத்திலிருந்து 2-ஆம் இடத்திற்கு செல்கிறது. காரணம் கடந்த சில நாட்களாக இந்தியாவின் தினசரி பாதிப்பு 75 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. ஆனால் 2-ஆம் இடத்தில் உள்ள பிரேசிலில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்துக்கள் உள்ளது.
இந்தியாவின் தினசரி பாதிப்பு இதே நிலை தொடர்ந்தால் 1 மாதத்தில் பிரேசிலை என்ன? அமெரிக்காவை கூட பின்னுக்குத்தள்ளும் சூழல் உருவாகும். அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்குள் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.