புதுதில்லி:
கொரோனா நெருக்கடி காலத்தில் இந்திய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது இரக்கமற்ற செயல் என்று நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாட்டா, மிகக் கடுமையாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும்கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பிரச் சனை காலத்தில் இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மற்றவர்கள் (ஊழியர்கள்) உணர்வைப்புரிந்து கொள்ளாததையே காட்டுகிறது.ஊழியர்கள் தங்களது நிறுவனங்களுக்காக வேலை பார்க்கின்றனர். அவர்களது வேலைநேரம் முழுக்க நிறுவனத்துக்காகவே முழு மூச்சுடன் உழைக்கின்றனர். ஆனால் ஒரு நெருக்கடி என்று வரும்போது, நிறுவனங்கள் அந்த ஊழியர் களையே வெளியே விரட்டுவது நியாயமா?
நிறுவனங்கள் இக்கட்டான நேரங்களில் மீண்டு வருவதற்கு சில விஷயங்களை செய்ய வேண்டியிருப்பது தேவைதான். ஆனால், கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்தே வேலை என்பது ஒரு நல்ல தீர்வு. அதேநேரம், ஊழியர்களை வேலையை விட்டுநீக்குவது மட்டும் தீர்வாக இருக் காது.ஒவ்வொரு நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்கள் மீது பொறுப்புஉள்ளது. வணிகம் என்பது வெறும்பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல; சரியான நடவடிக்கைகள் மூலம்வாடிக்கையாளர், பங்குதாரர், பணியாற்றுபவர் என அனைவரின் நம்பிக்கையும் பெறுவதும் ஆகும்.இவ்வாறு ரத்தன் டாடா கூறியுள்ளார்.