நியூயார்க்
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தனது பரவல் வேகத்தை தினமும் ஜெட் வேகத்தில் தொடர்ந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் தான். மற்ற நாடுகளில் கொரோனா பரவல் வேகம் நடைபோடுகிறது என்றால் இந்த 4 நாடுகளில் பறக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு இந்த 4 நாடுகளில் கொரோனவால் உருகுலைந்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 87 லட்சத்து 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 63 ஆயிரம் பலியாகியுள்ள நிலையில், 46 ஆயிரத்து 43 ஆயிரம் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா பலியானோர்களின் எண்ணிக்கையில் இந்தியா 8-வது இடத்தை பெற்று மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 1.21 லட்சம் பலியாகி உள்ளனர். பிரேசில் (49,090), இங்கிலாந்து (42,461), ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. குறுகிய காலத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள இந்தியா 12 ஆயிரத்து 971 பேர் பலி எண்ணிக்கையுடன் 8-வது இடத்தில் பயணிக்க தொடங்கியுள்ளது.