tamilnadu

img

உலக நாடுகளிலேயே ஜொலிக்காத தங்கங்கள்...

உலக நாடுகளிலேயே தங்கத்தை அதிகம் விரும்பும், தங்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் யார் என ஆராய்ந்தால் நிச்சயம் முதல் இடத்தில் இந்திய மக்கள் தான் இருப்பார்கள். வீட்டின் எந்த வொரு சுப நிகழ்வையும் சிறு தங் கத்தையாவது முன்வைத்துக் கொண் டாடப் பழகியவர்களும், தங்கத்திற் கென்று ஒரு சிறப்பு நாளையே ஒதுக் கிக் கொண்டாடும் வழக்கம் கொண் டவர்களும் நாம் தான். இதனால் தான் நாளுக்கு நாள் தங்க விலை ஏறி னாலும், இறங்கினாலும் தங்கத்தின் மேல் கொண்ட மோகம் மட்டும் என் றுமே குறைந்தேயில்லை. இத்தகைய தங்கத்தை மக்களின் ரசனைகளுக்குத் தகுந்தவாறு வடிவமைத்து மெரு கேற்றிக் கொடுக்கும் பொற் கொல்லர்கள் கோவை முழுவதும் நிறைந்துள்ளனர். குறிப்பாக, கோவையின் டவுன் ஹால் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொற்கொல்லர் கள் பல தசாப்தங்களாக இந்த பணி யினை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கனிசமானோர் சொந்தக் கடை களையும் நடத்தி வருகின்றனர். இத னால் அப்பகுதியைச் சுற்றி 400க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் அமைந் துள்ளன. இதேபோல் தங்கந் ஆப ரணங்களை செய்து வெளி மாவட் டங்களுக்கு மொத்தமாக அனுப்பும் ஹோல்சேல் வியாபாரிகளும் ஆயி ரக்கணக்கில் உள்ளனர். தற்சமயம், கொரோனா பொதுமுடக்கத்தால் இவர்களின் பணியும் முற்றிலும் முடக்கப்பட்டிருந்தாலும், தங்கத் தையே வாழ்நாள் முதலீடாகக் கொண்ட பொற்கொல்லர்களுக்கு எல்லாம் என்ன கவலை இருந்துவிட போகிறது என்ற எண்ணம் பொதுவாக மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், உண்மையில் அவைய னைத்தும் வெரும் மாயபிம்பம் என்பதே இப்பொற்கொல்லர்களின் ஒன்றுபட்ட குரல்களாக எழுகிறது.

உயிர்போய், உயிர் வருகிறது...

25 வருடங்களாக இத்தொழி லைச் செய்து வரும் சிங்காரவேலு என்பவர் குறிப்பிடுகையில், வெளி யில் எல்லோரும் நினைப்பதுபோல் பொற்கொல்லர்கள் எல்லாம் வாழ் வில் வறுமையற்றவர்கள் கிடை யாது. வீட்டு வாடகை கூட நான்கு மாதங்களாக என்னால் சரிவரக் கொடுக்க முடியவில்லை. இதுதான் எங்கள் நிலை. நான் தங்கக் கூலி வேலை தான் செய்கிறேன், மற்றபடி கடையெல்லாம் எனக்குக் கிடையாது. எனவே தினசரி 12 மணி நேரம் வரை உழைத்தால் தான் அந்த நாளை எங்களால் ஓட்ட முடியும். இத்தொழிலைப் பொறுத்தவரை தங்கம் செய்வதற்கு நாங்கள் மட்டும் காரணமில்லை. தங் கம் டையிங், பாலிஷிங் உட்பட பல வேலைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, எங்களது கூலியை நாங்கள் அவர்களோடும் பங்கிட வேண்டும். தற்போது கொரோனா காலம் ஆரம்பித்தவுடன் வாரத்தில் 2,3 நாட்கள் தான் வேலை உள்ளது. குழந்தைகளுக்குப் பள்ளி இல்லை என்பதால் ஓரளவு தப்பித்து வருகிறோம். அரசால் ஒரே மாதம் மட்டும் தான், ஆயிரம் ரூபாய் கொடுக் கப்பட்டது. இலவசமாக கொடுக்கப் பட்ட ரேசன் பொருட்களும் இந்த மாதத்திலிருந்து காசு கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது என்கிறார்.  இவருக்கு உதவியாக அப்பணி யில் ஈடுபடும் அவரது மனைவி முத்து லட்சுமி குறிப்பிடுகையில், இத்தொ ழிலைப் பெருமையாகவோ, கௌரவ மாகவோ சொல்லிக் கொள்ளலாமே தவிர உண்மையில் எங்களுக்கு இதைத்தவிர வேறெந்த தொழிலும் வாழ்வாதாரமாக இல்லாததால் தான் இத்தொழிலில் உள்ளோம் என்பதே உண்மையாகும். விவரம் தெரிந்ததிலி ருந்து இத்தொழிலைத் தான் நாங் கள் செய்து வருகிறோம். 10,20 கிராமில் எல்லாம் தங்கம் செய்யும் போது வேண்டாதவையாக வெளி யேறும் தங்கம் கண்ணுக்குக் கூட தெரியாது. அதில் நாங்கள் பொய்யாக ஏமாற்றி தங்கத்தை கொள்ளையடிக்கி றோம் எனக்கூறி சிலர் எங்கள் வீட் டிற்கு வந்து எங்களையே அதிகா ரம் செய்து வேலை வாங்கிய சமயத்தி லெல்லாம் நான் தற்கொலை செய்யும் எண்ணம் வரை சென்றுவிட்டேன். இவ்வாறு ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பாதிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும். அதுவும் தற்போதைய பொதுமுடக்க காலத் தில் 200 ரூபாய் கிடைப்பதே பெரும் பாடாக உள்ளது. தற்போதைய விலை வாசியைப் பொறுத்தவரை ஒரு சராசரி குடும்பத்திற்கு மாதம் ரூ.20 ஆயிரமாவது தேவைப்படும். அவ்வ ளவு கூட வேண்டாம், ஒரு ரூ. 5 ஆயிர மாவது அரசு கொடுத்திருக்கலாம். ஒரு மாதம் கொடுத்த ஆயிரம் ரூபாய் எங்கிருந்து பத்தும்? என வேத னையைக் கொட்டுகிறார் முத்து லட்சுமி.

அன்றாட உணவிற்கே திண்டாட்டம்

மிகவும் நுட்பமாக தங்கநகை யினை வடிவமைப்பவரும், 45 வரு டத்திற்கும் மேல் இத்தொழிலில் அனு பவம் கொண்டவரான முருகன் என்பவர் கூறுகையில், கொரோனா விற்கு முன்பும் இத்தொழில் சுணக்கம் தான். ஆனால் ஊரடங்கிற்குப் பின் அன்றாட உணவிற்கே திண்டாட வேண்டிய நிலைமை ஆயிற்று. இதை வெளியில் சொல்லக் கூட முடியாத நிலையில் உள்ளோம். எவ் வளவு குறைவாக இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் தங்கத்தில் நாங் கள் ஆபரணம் செய்தாக வேண்டும். இதற்குள் செய்வது கஷ்டம் என்றால், வேறு நகை ஆசாரியைத் தேடிச் சென்று விடுவர். இத்தொழிலைப் பொறுத்தவரை இதிலிருந்து வரும் வருமானம் தினசரி உணவிற்கும் வீட்டு வாடகைக்கும் தான் சரியாக இருக்கும். மற்றபடி லாபமெல்லாம் இதிலிருந்து பெற முடியாது. மேலும் கண்ணில் சிறிது பாதிப்பு ஏற்பட்டா லும் இத்தொழிலைத் தொடர முடி யாது. ஆனால் தற்போதைய சூழலில் இதில் உணவிற்கே கூட வழியில்லா ததால் பலர் வேறு வேலைக்குச் சென்று விட்டனர். அவர்களும் இந் நிலை சரியானால் மீண்டும் இத்தொழி லைச் செய்ய ஆர்வத்துடன் உள்ள னர். இதுதவிர தங்க விலை அதிக ரிக்க, அதிகரிக்க எங்களுக்கான வேஸ் டேஜ் குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு நகை செய்ய 5 ஒருங் கிணைக்கப்பட்ட தொழில்கள் வேலையை முடித்தாக வேண்டும். அந்த 5 குடும்பங்களுக்குமே தற் போதைய நிலை திண்டாட்டம் தான். சிஐடியு அமைப்பு இதற்கெல்லாம் பல காலமாக போராடி வந்தும் சரியான தீர்வு தான் காணப்படவில்லை, என் கிறார் முருகன்.

முழுவதும் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்

கோல்டு டையிங் (தங்க ஆபர ணம் உருவாவதற்கான வடிவம் கொடுக்கும்) வேலை செய்து வரும் செந்தில்குமார் கூறுகையில், கடந்த பத்து வருடங்களாக இந்த வேலை செய்து வருகிறேன். தற்போதைய நிலையைப் பொறுத்தவரை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் இத்தொழி லைச் செய்து வருகிறோம். கொரோ னாவிற்கு முன்பும், பின்பும் எங்க ளின் நிலை முற்றிலும் வேறுவிதமாக உள்ளது. மேலும் எங்கள் பணியி லிருந்த வெளிமாநிலத்தவர் பெரும் பாலும் அவரவர் ஊர்களுக்குச் சென்று விட்டதால் நிலை இன்னும் மோசமாத் தான் உள்ளது. தற்போது 100 ரூபாய் கிடைக்கும் இடத்தில் 30 ரூபாய் கிடைக்கும். இவ்வாறு தான் எங்களின் நிலை உள்ளது. மேலும் அரசு எங்களுக்கென எந்தவொரு உதவியும் செய்யவில்லை. அது மிக வும் ஏமாற்றமாக இருப்பதால் அரசு இதுகுறித்த முடிவுகளைப் பரிசீலிக்க வேண்டும், என்கிறார்.

எதிர்காலமில்லாமல் போகும் தங்கத்தொழில்

தங்க செயின் செய்துவரும் பணியை இருபது வருடங்களாகச் மேற்கொண்டு வரும் சேகர் என்பவர் கூறுகையில், கொரோனாவிற்கு முன் வேலை இருந்தது, எனவே பெரிதாக நாங்கள் யாரும் பாதிக் கப்படவில்லை. சாதாரணமாகவே எங் களைப் பொறுத்தவரை வேலை இருந்தால் செய்வோம், இல்லை யென்றால் சும்மா தான் இருக்க வேண் டும். தங்கத்தொழில் என்றாலே இப் படித்தான் இருக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்தமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வீட்டு வாடகை, குழந்தைக ளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டுவது உட்பட அன்றாடத் தேவை அனைத் துமே வெகுவாக பாதிக்கப்பட்டது. அர சைப் பொறுத்தவரை எங்கள் சிரம மெல்லாம் ஒரு கஷ்டமென்றே எடுத் துக் கொள்வதில்லை. அதனால் எங்களுக்கென்று இக்கொரோனா காலத்தில் எதுவுமே செய்யவில்லை. சாதாரணமாகவே இவ்வேலைக ளைச் செய்ய எதிர்காலத்தில் ஆள் இல்லை. தற்போது இத்தொழிலைச் செய்துவரும் பெரும்பாலானோர் 35, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான். ஏனெனில் இளையோர் யாரும் விரும்பி இத்தொழிலைக் கற்றுக் கொள்வது இல்லை. கொரோனா நிலை இன்னும் தொடருமானால் அங்குமிங்கும் இவ்வேலையைச் செய்துவரும் இளையோரும் இதனை விட்டு வேறு பணிக்குச் சென்று விடு வர். இதனால் அடுத்த தலைமுறை யினர் இத்தொழிலையே மறந்துவிடக் கூடும், என கவலையுறுகிறார் சேகர்.

கண்டுகொள்ளாத அரசு

இதுகுறித்து சந்திரன் என்பவர் கூறுகையில், கிட்டத்தட்ட 50 ஆண்டு களாக இவ்விடத்தில் இத்தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் பரம் பரை பரம்பரையாக இத்தொழி லைச் செய்து வருகின்றனர். ஆரம்பத் திலிருந்தே பல போராட்டங்களால் தான் ஓரளவாவது இவர்களுக்கு அடிப்படை உரிமை பெறப்பட்டது. ஆனால் இன்னமும் கூட பல இடங்க ளில் அவை மறுக்கப்பட்டு பெரும் பாலானோரின் உழைப்பு சுரண்டப் பட்டு வருகிறது. சில பத்தாண்டுக ளுக்கு முன் இல்லாத அளவிற்கு தற்போது பெரும் தொழிற்சாலைகள் பெருகி அங்கே சென்று வேலை செய்ய வேண்டிய நிலைக்கு பெரும் பாலான தங்க ஆசாரிகள் தள்ளப் பட்டு விட்டனர். அதிலும் குறிப்பாக பல பெண்கள் மிக சொற்ப சம்பளத் திற்கு 13 மணி நேரம் வரை அங்கு உழைத்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் பெண்களில் சிலர் பாலி யல் வல்லுறவுக்கு உட்பட்டு தற் கொலை செய்து மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளது.  குறிப்பாக ஊட்டி, குன்னூர், திருப் பூர் போன்ற இடங்களில் இருந்து அழைத்து வரப்படும் பெண்கள் இரவு பகல் பாராமல் எந்த விடுமுறையு மின்றி கொத்தடிமை போல் வேலை வாங்கப்பட்டு வருகின்றனர். இது தவிர தங்கநகைத் தொழிலாளிக ளுக்கு வழங்கப்படும் கூலியும் கடந்த காலங்களிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டே வருகிறது. மேலும், தங்கநகை ஆசாரிகள் வேலைக்கு வரும் தங்கத்தை எளிதில் பதுக்கி வைத்துக் கொள்வர் என பலரும் எண் ணுவதுண்டு. ஆனால் உண்மையில், அதிக வேஸ்டேஜ் ஏற்படும் வண்ணம் டிசைன் கொடுத்துவிட்டு அதனை செய்வதற்குத் தகுந்தாற்போல் இல் லாமல் தங்கம் மிகவும் குறைவாக கொடுக்கப்படும். இதனால் 100 மில்லி வரை நாங்கள் தான் சேர்த்து நகை செய்ய வேண்டும். இவ்வாறிருக்கும் எங்களைப் பாதுகாத்து, எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுக் கிறார். - ச.காவியா