சண்டிகர்
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பதற்றத்தில் உள்ள நிலையில், பஞ்சாப் அரசு தனிமைப்படுத்துதலில் புதிய சலுகை ஒன்றை அளித்துள்ளது.
அதாவது பஞ்சாப் மாநிலத்துக்கு வரும் நபர்கள் 3 நாட்களுக்குள் (72 மணிநேரத்தில்) திரும்பிவிட்டால் தனிமைப்படுத்துதல் இல்லை. அந்த நேரங்களில் அறிகுறி தென்பட்டால் 104 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். 3 நாட்களுக்கு மேல் தங்கினால் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும். என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் பயணம் செய்யும் மக்கள் COVA என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர்களது பயண விபரம் முழுவதும் அந்த செயலியில் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.