தில்லி
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தீவிரமான வேகத்தில் எழுச்சி பெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பரவல் வேகம் இன்னும் குறையவில்லை. குறிப்பாக கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டதாக அசால்ட்டாக இருந்த ஐரோப்பா நாடுகளில் கொரோனா 2-வது கட்ட ஆட்டத்தை கையிலெடுத்து அதிரடி காண்பித்து வருகிறது.
தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் மையம் கொண்டுள்ள கொரோனா வைரஸ் அந்நாடுகளில் தாறுமாறான வேகத்தில் பரவி வருகிறது. ஆசிய கண்டத்தில் இந்தியா கொரோனா மையமாகவும், வடஅமெரிக்க கண்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்தில் ரஷ்யா, தென் அமெரிக்க கண்டத்தில் பிரேசில் ஆகியவைகள் அந்தந்த கண்டங்களின் கொரோனா மையங்களாக உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் புதிய உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2.87 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 388 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.40 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கான உலக அட்டவணையில் தற்போது இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. கொரோனா டெஸ்ட்கள் அதிகம் எடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறும் நிலை ஏற்பட உள்ளது.