இதயமற்ற பாஜகவால் மதுரை மாணவி மரணம்!
மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா மரணத் திற்கு இதயமற்ற பாஜகதான் காரணம். இது தற்கொலை அல்ல; கொலைஎன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். இந்தக் கொலையோடு ‘பேட்டி பதாவ், பேட்டிபச்சாவ்’ (பெண் குழந்தையை பாதுகாப்போம், படிக்க வைப்போம்) என்ற மோடியின் முழக்கமும் கொல்லப்பட்டு விட்டது என்று அகிலேஷ் சாடியுள்ளார்.
*********************
கர்நாடகத்திலும் இந்தி தெரியாது போடா...
“இந்தி தெரியாது போடா...” என்ற டி- சர்ட்பிரச்சாரம் கர்நாடகம்போன்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. அந்த வகையில், கர்நாடகத்தைச் சேர்ந்தவரும் திரைக்கலைஞருமான நடிகர் பிரகாஷ் ராஜூம் ‘இந்தி தெரியாது போடா’ என்று கன்னட மொழியில் எழுதப்பட்ட டி- சர்ட் அணிந்துள்ளார்.
*********************
சாதி அரசியல் செய்கிறது, பாஜக!
“நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில், நடிகை கங்கனா ரணாவத்திற்கு பாஜக ஆதரவு அளிப்பது, பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் உயர் சாதிப் பிரிவினரான ராஜ்புத்-களின் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜக செய்யும் முயற்சி” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
*********************
மோடி கொள்கைகளுக்குபின்னால் நாடு நிற்காது..!
நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்பார்கள், ஆனால் பிரதமர் மோடியின் கொள்கைகள், செயல்களுக் குப் பின்னால் நிற்பார்களா? என்பது சந் தேகம்தான் என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.