தில்லி
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 15 பேர் புதிய கொரோனா நோயாளிகளாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 610 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து 279 பேர் பலியாகியுள்ளனர். ஆறுதல் செய்தியாக கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.