tamilnadu

img

மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக வெளிநடப்பு

புதுதில்லி,நவ.19- காங்கிரஸ் தலைவர்கள் சோனியா  காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டதைக் கண்டித்து மக்களவையி லிருந்து செவ்வாயன்று காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபணை தெரிவித்தது.  இதுதொடர்பாக விவாதிக்க செவ்வா யன்று மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு  தீர்மானத்தை சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.