சென்னை:
2020ஆம் ஆண்டு கொரோ னாவால் துயரம் மிகுந்த ஆண் டாக இருந்தாலும், சமூகநீதி, சம வாய்ப்பு, சமத்துவம் மலரும் ஆண்டாக அமைந்திட, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க வென்று ஆட்சியில் அமரும் ஆண்டாக 2021 அமையவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2020 என்ற இந்தக் கொடுமையான கொடூரமான தொற்று கொரோனா (கோவிட் 19) உலக மக்களின்10 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியது; அத்தகு ஆண்டு முடிவுக்கு வந்து, புதிய ஆண்டு பிறந்த நிலையில்,புதிய முழு நம்பிக்கை உள்ளத்தில்ஏற்பட்டு, பழையபடி இயல்பாக நடமாடி, நாளும் பணி செய்யும்நிலைமை என்று திரும்புமோ என்ற ஏக்கமும், நீங்காத அச்சமும்உலகத்தை யோசிக்க வைத்திருக்கும் நிலைதான் யதார்த்த மாக உள்ளது!நம்பிக்கையை மனிதர்கள் இழக்கவேண்டிய அவசியம் இல்லை. மனித அறிவு வளமும், சிந்தனையும், பகுத்தறிவும், ‘நோய் நாடி நோய் முதல் நாடும்’ ஆய்வினைத் தந்துள்ளதால், அந்தந்த நாடுகளில் பல தடுப்பூசிகள் தயாராகிப் பயன் பாட்டுக்கும் வந்துவிட்டன! புதிய ஆண்டு புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் உழைப்பும், சீரிய வியூகமும், கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கும் எடுத்துக் காட்டான செயற்பாடும் ‘‘திராவிடம் வெல்லும், உலகம் அதைச் சொல்லும்” என்பதை வரலாற்றில் நிலைநாட்டும் ஆண்டாகதமிழ் நாட்டைப் பொறுத்தவரை - 2021ஆம் ஆண்டு அமையட்டும்!
களத்திற்கு வருவோம் என்று புஜபலம் காட்டித் தோள் தட்டியவர்களும் வருமுன்னேயே காணாமற்போன கதை தமிழ்நாட்டின் வரலாற்றின் முதல் திருப்பம் என்பதைஎண்ணி, பண பலம், அதிகார பலம், பத்திரிகை பலம், சினிமா பலம் எல்லாற்றையும் முறியடிக்க சூளுரை மேற்கொள்ளுவோம்!திராவிடர்தம் புத்தாண்டு உறுதியாக இது அமையவேண்டும்! அனைவருக்கும் திருப்பம் ஏற்படுத்தும் திராவிடப் புத்தாண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்! திரா விடம் வெல்லும் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.