tamilnadu

img

அடுத்த ஆண்டு முதல்  ஆந்திராவில் பூரண மதுவிலக்கு 

ஹைதராபாத்:
தற்போது ஆந்திர முதலமைச்சராக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டபோது, கட்சி ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார்.துணை முதல்வர் கே. நாராயண சுவாமி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்டோபர் 1 ஆம் தேதியுடன் உரிமம் முடிவடைந்த அனைத்து மதுபான விற்பனை கடைகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. படிப்படியாக மதுபான பயன்பாட்டை குறைத்து, முடிவில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்படும்.  3,448 மதுபான விற்பனை கடைகள், ஏ.பி. பெவரேஜஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ளது. கடைகளில் பணிபுரிய 3,500 சூப்பர் வைசர்களும், 8 ஆயிரத்து 33 விற்பனை பிரதிநிதிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிறதா என்று கண்காணித்து தகவல் கொடுக்க இரவு நேர வாட்ச்மேன் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யவும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.