tamilnadu

img

முஸ்லிம் மக்களுக்கு விரோதமான இலங்கை தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டம்

முஸ்லிம் மக்களுக்கு விரோதமான இலங்கை தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்தும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏபிவிபி குண்டர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்தும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட குழுக்கள் இணைந்து சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் திங்கள் மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. கே. சண்முகம், ஆர். ஜெயராமன், எம். ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் விஜயகுமார், சிபிஐ வடசென்னை மாவட்டச் செயலாளர் மூர்த்தி, பெரம்பூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.