tamilnadu

img

சாவக்காடு காங். செயலாளர் ஆதரவாளர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்

திருச்சூர்:
காங்கிரஸ் கட்சியின் சாவக்காடு ஒன்றிய செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். 

சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல், 2021- சட்டமன்ற பொதுத் தேர்தல் என கேரள அரசியல் சூடாகி வரும் நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏராளமானோர் குடும்பத்துடன் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மத்தியில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் சவரா ஒன்றிய செயலாளர் அக்பர் கோனோத்து மற்றும் பூந்தாத்து ரபீக், ஆர்.பி.பஷீர் ஆகிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். முதுவட்டூர் ரெட் ஹவுசில் நடந்த நிகழ்ச்சியில் சிபிஎம் திருச்சூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.அப்துல்காதர், எம்எல்ஏ செம்மலர் சூட்டி ஆகியோர்  அவர்களை வரவேற்றனர். சாவக்காடு நகர்மன்ற தலைவர் அக்பர் தலைமை வகித்தார்.