tamilnadu

img

சீனாவிடம் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை பெற்ற பிஎம் கேர்ஸ்....

புதுதில்லி:
எல்லை நிலவரம் தொடர்பாக கேள்விஎழுப்பும் எதிர்க்கட்சிகளை, சீனாவுக்குஆதரவாக பேசுகிறார்கள்; இவர்கள் தேசத்துரோகிகள் என்று மத்திய பாஜகஅரசு முத்திரை குத்தி வருகிறது.

காங்கிரஸ் தலைமை அலுவலகத் திற்கு சீனத் தூதுக்குழுவினர் அவ்வப் போது வந்து செல்வதாகவும்; ராஜீவ் காந்தி பவுண்டேசன் சீனாவிடம் ரூ.1.5கோடி நன்கொடை பெற்றிருப்பதாகவும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், ஜனவரி 2011-இல் சீன கம்யூனிஸ்ட்கட்சியின் அழைப்பின் பெயரில் பாஜக குழு சீனாவுக்கு சென்றிருப்பதையும், ஆகஸ்ட் 2019-இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு பாஜகதலைமையகத்திற்கு வந்து போயிருப்பதையும் நினைவுபடுத்தி, இதுவும் தேசத்துரோகம்தானா? என்று கேள்வி எழுப்பியது.

குஜராத் முதல்வராக இருந்தேபோதே மோடி 4 முறை சீனாவுக்கு சென்றது ஏன்? என்றும் அது கேட்டது.இந்நிலையில், பிரதமர் மோடியைதலைவராகக் கொண்டு, இயங்கிவரும்பிஎம் கேர்ஸூக்கு, சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 150 கோடி ரூபாய் வரைநன்கொடைகள் பெறப்பட்டு இருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை காங்கிரஸ் வைத்துள்ளது.“பிஎம் கேர்ஸ் எப்படி இயங்குகிறது, யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஒருவருக்கும் தெரியாது. அந்த நன்கொடைஎதற்குப் பயன்படுத்தப்படுகிறது? என்பதும் தெரியாது. சிஏஜி உட்பட எந்த ஒருபொது அதிகாரம் படைத்த அமைப்பும்அதனை தணிக்கை செய்ய முடியாது. அப்படிப்பட்ட ரகசியமான மூடுண்டஅமைப்புக்கு, சீன நிறுவனங்களான ஹாவோய்-யிடமிருந்து ரூ. 7 கோடி, ஷியோமி-யிடமிருந்து ரூ. 15 கோடி, ஓப்போ-விடமிருந்து ரூ. 1 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 38 சதவிகித சீனப் பங்குகளைவைத்திருக்கும் பேடிஎம் நிறுவனத்திடம் ரூ. 100 கோடி பெறப்பட்டுள்ளது. சீன சமூக வலைத்தள நிறுவனமான டிக் டாக்-கிடமிருந்து மட்டும் ரூ. 30 கோடி பிஎம் கேர்சுக்கு நிதி பெறப் பட்டுள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பட்டியலிட்டுள்ளார்.

சீனாவின் மீது வேறுபாடுகள் இருக்கிறது என்றால் ஏன் சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை ஏற்க வேண்டும்? ஒரு நாட்டின் பிரதமரே தன்னுடைய பதவியை சமரசம்செய்து கொண்டு சீன நிறுவனங்களிடமிருந்து ரூ. 100 கோடி பெறுமான நன் கொடைகளைப் பெற்றால், அவர் எப்படி சீனாவின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்துவார், தடுப்பார்? என்று சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.