புதுதில்லி:
பிஎம்- கேர்ஸ் மூலம் திரட்டப்பட்ட நிதியை, இப்போதுவரை கொரோனா நோயாளிகளுக்கு செலவிடாதது ஏன்?என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அபிஷேக் மனு சிங்வி காணொலி மூலம் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “பிரதமர் நிவாரண நிதியம் (Prime Minister’sNational Rellef Fund - PMNRF) என இருக்கும்போது, பிஎம் கேர்ஸ் (PM-Cares) நிதி தனியாக உருவாக்கப் பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா பாதிப்புக்காக மட்டுமே ‘பிஎம் கேர்ஸ்’ நிதிஉருவாக்கப்பட்டது என்றால், அதற்கு வந்த நிதியை இதுவரை கொரோனா நோயாளிகளுக்கு செலவிடாதது ஏன்?”என கேட்டுள்ள அபிஷேக் சிங்வி, இவ்வாறு செலவிடப் படாத பிஎம்-கேர்ஸ் நிதியத்திற்கு, பொதுமக்களிடம் நன்கொடைகளை கேட்கக் கூடாது என்றும் காட்டமாக கூறியுள்ளார்.“பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதுகுறித்து மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் அல்லது சுயாட்சி பெற்ற நம்பகத்தன்மை உள்ள நிறுவனம் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும்” எனவும்சிங்வி வலியுறுத்தியுள்ளார்.