tamilnadu

img

ரயில்கள் ரத்து 6 மடங்கு அதிகரிப்பு; 3 ஆண்டாக தண்டவாள பராமரிப்பு இல்லை மோடி ஆட்சியில் சீரழிக்கப்பட்ட இந்திய ரயில்வே!

புதுதில்லி, ஏப். 8-

கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில், ரயில்வேயின் செயல்பாடு படுமோசமான முறையில் இருந்திருப்பது, மத்திய தகவல் ஆணைய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ரயில் சேவையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 80 கோடி பேர்ரயிலில் பயணிக்கின்றனர். 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியா என்ற மாபெரும் நாட்டை இணைக்கும் நரம்பு மண்டலமாக இந்திய ரயில்வே விளங்குகிறது.இந்நிலையில், நரேந்திர மோடியின்ஐந்தாண்டு கால பாஜக ஆட்சி, இந்தியரயில்வே துறையின் வளர்ச்சிக்கு எந்த திட்டங்களையும் வகுக்காததுடன், ஏற்கெனவே இருந்த சிறப்புக்களையும் முற்றிலுமாக குலைத்துப் போட்டிருப்பது, பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து வந்தது. இந்திய ரயில்வேமிகப்பெரிய அளவிற்கு தற்போது வளர்ந்து நிற்பதற்கும் இது முக்கியமானஒன்றாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததுமே, தனி பட்ஜெட் நடைமுறையை ஒழித்துக் கட்டி, ரயில்வேவரவு - செலவுகளை, பொது பட்ஜெட் டோடு ஒன்றாக போட்டு குழப்பினார். அப்போதே ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் போய்விட்டது.விளைவு, மோடி பிரதமரான 2014 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகளில், தண்டவாளங்கள் புதுப்பித்தல் பணி அடியோடு நின்று போயிருக்கிறது.


1 லட்சத்து 17 கி.மீ. தூரத்திற்கான தண்டவாளங்களில் வெறும் 4 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கான தண்டவாளங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பைப் பொறுத்தவரை ரயில் தண்டவாளங்கள் புதுப்பித்தல் முக்கியமானது. ஆனால் அந்தப்பணியையே மோடி அரசு செய்யவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும்தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்தெரியவந்துள்ளது.கடந்த 2014-15இல் மோடி ஆட்சிக்குவந்த முதலாவது ஆண்டில், ரத்துசெய்யப்படும் ரயில்களின் எண்ணிக்கை 3591 என்ற நிலையில்தான் இருந்தன.ஆனால், 2017-18இல் ரத்து செய்யப் படும் ரயில்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. அதாவது6 மடங்கு ரயில்கள், பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் நிலையங்கள் புதுப்பித்தலும்மோடி ஆட்சியில் விரைவுபடுத்தப்படவில்லை. இதற்கு உள்ளாட்சி அமைப்பு களின் அனுமதியைப் பெறுவதில் ஏற் படும் தாமதமே காரணம் என்று மோடி அரசு கூறியிருக்கிறது.சார்பாக், கோமதி நகர் (லக்னோ), ஹபிப் கஞ்ச் (போபால்), சூரத், தில்லி சாரை, ரோகில்லா, ஜம்முதாவி, கோட்டா, கோழிக்கோடு, எர்ணாகுளம், மடகாவ், நெல்லூர், திருப்பதி, புதுச்சேரிஉள்ளிட்ட 13 ரயில் நிலையங்கள், தனியார் பங்களிப்புடன் நவீன ரயில் நிலையங்களாக புதுப்பிக்கப்படும் என்று மோடி அரசு அறிவித்து இருந்தது. அந்தஅறிவிப்பும் செயல்வடிவம் பெறவில்லை. மும்பை - அகமதாபாத் இடையே, ரூ.1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி அறிவித்தார்.


இது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு உதவாத திட்டம் என்றாலும், அந்ததிட்டத்தையும் அடிக்கல் நாட்டியதோடு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மோடி அரசால் ஒரு இன்ச் கூட நகர்த்தமுடியவில்லை. புல்லட் ரயில் திட்டமும்கிடப்புக்கு போய்விட்டது.மோடியின் ஆட்சியில் முக்கியமான பிரச்சனை. ரயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாததாகும். கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே-யில்2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் ரயில்வே ஊழியர்கள் கடும்பணிச்சுமைக்கு ஆளாகினர். வேலையை விட்டே சென்றுவிடலாமா? என்று எண்ணும் அளவிற்கு பலர் துயரத்தை அனுபவித்தனர். எனினும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து நான்கரை ஆண்டுகளாக மோடி அரசு சிறிதும் சிந்திக்கவில்லை. அண்மையில் ஆட்சி முடியும் தருவாயில்தான், தேர்தலை மனத்தில் வைத்து, 2 லட்சம் பணியிடங்களை நிரப்பப் போகிறோம் என்று பம்மாத்து காட்டியிருக்கிறது.இவ்வாறு நாட்டின் முக்கியமான ஒரு துறையே, மோடி அரசால் மிகமோசமான முறையில் சீரழிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியாக அமைந்துள்ளது.